கன்னடத்துக்கு போகும் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன்!

கன்னடத்துக்கு போகும் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன்!

செய்திகள் 22-May-2014 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களை இயக்கிய சரவணன் ஜெய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஆன்ட்ரியா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்தை இயக்கி முடித்ததும் ஒரு கன்னட படத்தை இயக்கவிருக்கிறார் சரவணன். இந்தப் படத்தில் கன்னடத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான புனித்ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் புனித் ராஜ்குமாரை சந்தித்த சரவணன் அவரிடம் ஒரு கதையின் அவுட்லைனை சொன்னதாகவும், அந்த அவுட்லைன் புனித் ராஜ்குமாருக்கு ரொம்பவும் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சரவணன் அடுத்து தமிழில் இயக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;