‘மான் கராத்தே’ டீமுக்கு கோர்ட் சம்மன்!

‘மான் கராத்தே’ டீமுக்கு கோர்ட் சம்மன்!

செய்திகள் 22-May-2014 10:24 AM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படம், ‘மான் கராத்தே’. இந்தப் படத்தில் குத்துச் சண்டை பின்னணியில் பல காட்சிகள் இடம் பெறுகிறது. ஆனால் அந்த குத்துச்சண்டை காட்சிகளை அவதூறாக சித்தரித்துள்ளதாக கூறி சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி சென்னை ஜார்ஜ் டவுன் 15-வது கோர்ட்டில் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த மனுவில்,

‘‘அண்மையில் வெளியான ‘மான் கராத்தே’ என்ற படத்தை பார்த்தேன். அதில் கௌரவ மிக்க குத்துச்சண்டை போட்டியை கேலி செய்யும் விதமாக பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயனும், நடிகர் வம்சி கிருஷ்ணாவும் குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவது மாதிரியான காட்சிகள் வைக்கப்பட்டுளது. அதில் இந்தப் போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்றால் உன் தோழியை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்ற வசனமும், வெற்றி பெறுவதற்காக எதிராளியிடம் கெஞ்சுவது போலவும் காட்சிகள் இடம பெறுகிறது. பல கட்டுப்பாடுகளை, மரபுகளை பின்பற்றி கண்ணியமான முறையில் நடத்தப்படும் போட்டி குத்துச்சண்டை. ஆனால், இந்த போட்டியை அவதூறாக சித்தரித்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தப் படத்தை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ், இந்தப் படத்திற்கு வசனம் எழுதி, இயக்கிய திருகுமரன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், வம்சி கிருஷ்ணா ஆகியோர் மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 30-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன், திருகுமரன், வம்சி கிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;