நகுல், தினேஷ் இணைந்து அழுத்தும் ‘எண் 1’

நகுல், தினேஷ் இணைந்து அழுத்தும் ‘எண் 1’

செய்திகள் 22-May-2014 10:07 AM IST Chandru கருத்துக்கள்

வி.எல்.எஸ் ராக் சினிமா சார்பாக வி.சந்திரன் தயாரிக்கும் படம் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’. ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குனர் சரவணனிடம் இணை இயக்குனராய் பணிபுரிந்து, பல விளம்பரப் படங்களை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்குகிறார். படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், நகுல், பிந்துமாதவி, ஐஸ்வர்யா (புது முகம்), ‘எதிர்நீச்சல்’ சதீஷ் என பலர் நடித்துள்ளனர்.

பூமியை நோக்கி வரும் காந்தப்புயலால் தகவல் தொழில்நுட்பம் முழுவதுமாக பாதிக்கபடுகிறது. இதனால் பாதிக்கப்படுவர்கள், இந்த பாதிப்பில் இருந்து எவ்வாறு மீண்டு வருகின்றனர் என்பதே இப்படத்தின் கதையாம். படத்தில் தாய்க்கும் மகனுக்குமான உறவை ஒரு புதிய கோணத்தில் காட்டியுள்ளனராம்.

காதல், த்ரில்லர், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்து கலவைகளும் இப்படத்தில் இருந்தாலும், மற்ற கமர்சியல் படங்களைப் போல் இல்லாமல் சிறிது வித்தியாசமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். படத்தில் தினேஷ் மற்றும் நகுல் நடிக்கும் காட்சிகள் வெகுவாகப் பேசப்படுமாம். ஜூன் மாதத்தில் இசைவெளியீட்டையும்ம், ஜூலை மாதத்தில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கபாலி மேக்கிங் வீடியோ


;