சன்னி லியோன் நடித்த ‘வடகறி’க்கு யு!

சன்னி லியோன் நடித்த ‘வடகறி’க்கு யு!

செய்திகள் 21-May-2014 5:03 PM IST Chandru கருத்துக்கள்

தயாநிதி அழகிரியின் மீகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜெய், சுவாதி, ஆர்.ஜே.பாலாஜி, கஸ்தூரி உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கும் படம் ‘வடகறி’. சரவணன் ராஜன் என்பவர் இப்படத்தின் கதை, திரைக்தை எழுதி இயக்கியிருக்கிறார். விவேக் சிவா, மெர்லின் சாலமோன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். ஆரம்பத்தில் இப்படத்தில் இசையமைப்பாளராக இருந்த யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான ஒரே ஒரு பாடலை மட்டும் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

முக்கியமாக இப்படத்தில் பிரபல ஹிந்தி நடிகை சன்னி லியோன் நடித்திருக்கிறார். ஹிந்தியில் படு கிளாமராக நடிக்கும் இவர் தமிழில் முதல்முறையாக ‘வடகறி’ படத்தில் நடித்து, ஒரு பாடலுக்கு ஆடியிருப்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், சென்சாரிலும் இப்படத்திற்கு எந்தவிதமான சர்டிஃபிகேட் கிடைக்கும் என திரையுலகினர் பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், படத்தில் எந்தவித ‘கட்’டும் செய்யாமல் ‘க்ளீன் யு’ சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறதாம் சென்சார் போர்டு.

அப்படினா... ரசிகர்கள் எதிர்பார்க்கிறது இருக்காதா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;