சுனைனாவின் ‘ஸ்லிம்’ அவதாரம்!

சுனைனாவின் ‘ஸ்லிம்’ அவதாரம்!

செய்திகள் 21-May-2014 1:03 PM IST Chandru கருத்துக்கள்

‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தவர் நடிகை சுனைனா. அதன் பிறகு ‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’, ‘பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம்’, ‘திருத்தணி’, ‘நீர்ப்பறவை’, ‘சமர்’ என வரிசையாக பல படங்களில் நடித்தார். ஆனால், இதில் ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’ படங்கள் மட்டுமே கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படி அமைந்தன. இருந்தாலும் மனம் தளராத சுனைனா தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கான படங்களைத் தேர்வு செய்வு நடித்து வருகிறார். அதோடு தன் பெயரையும் ‘அனுஷா’ என சமீபத்தில் மாற்றிக் கொண்டார்.

தற்போது ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நடித்துள்ள ‘நம்பியார்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுதவிர விஜய் சேதுபதி, கிருஷ்ணா நடிக்கும் ‘வன்மம்’ படத்திலும் அனுஷாதான் நாயகி. இப்படத்திற்காக தன் உடல் எடையை இன்னும் கொஞ்சம் குறைத்து ‘ஸ்லிம்’மாக மாறியிருக்கிறார் அம்மணி. இந்த புதிய ‘ஸ்லிம்’ அவதாரத்தை பார்த்தவர்களெல்லாம் பாராட்டு மழையால் அனுஷாவை நனைய வைக்கிறார்களாம். ‘வன்மம்’ படம் ரிலீஸிற்குப் பிறகு தன் கேரியரில் நிச்சயம் பெரிய மாற்றம் வரும் என பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார் சுனைனா என்ற அனுஷா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;