மோகன்லாலுக்கு இன்று பிறந்த நாள்!

மோகன்லாலுக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 21-May-2014 10:36 AM IST VRC கருத்துக்கள்

சிறந்த நடிகருக்கான் 2 தேசிய விருதுகள், 6 கேரள அரசு விருதுகள், 8 ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் பல குறிப்பிடத்தக்க விருதுகள் பெற்றுள்ள இந்தியாவின் மாபெரும் நடிகர் மோகன்லால்! ஒரு நடிகர் என்றில்லாமல் பல சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர்! தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் பல படங்களில், நேர்மை மிக்க காவல் துறை அதிகாரியாக, இராணுவ அதிகாரியாக நடித்துள்ள மோகன்லாலுக்கு இந்திய இராணுவத்தில் உயர் கௌரவ பதவியே வழங்கியிருக்கிறார்கள் என்றால அது இவருக்கு கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரம்! இன்று மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 35 ஆண்டுக்காலமாக சினிமாவில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு சிறந்த ஒரு நடிகராக திகழ்ந்து வரும் மோகன்லால் பிறந்த நாள் இன்று! லட்சக்கணக்கான தனது ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் மோகன்லாலுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;