ஐஸ்வர்யா ராயின் அடுத்த இயக்குனர்?

ஐஸ்வர்யா ராயின் அடுத்த இயக்குனர்?

செய்திகள் 20-May-2014 3:08 PM IST Top 10 கருத்துக்கள்

கடந்த 2011, நவம்பர் மாதம் ஆராத்யாவுக்கு தாய் ஆனதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் பச்சன் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. பிரபல பாலிவுட் இயக்குனர் பன்சாலி இயக்கிய ‘குசாரிஷ்’ ஹிந்தி படம்தான் ஐஸ்வர்யா ராய் நடித்த கடைசி படம். 2010-ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆன நிலையில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருகிறார் என்று பேசப்பட்டது. அவரது ரீ-என்ட்ரி படமாக அமையவிருப்பது அவரை சினிமாவில் நடிகையாக அறிமுகப்படுத்திய மணிரத்னம் இயக்கும் படம் என்று முதலில் கூறப்பட்டது! அதற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா நடிக்கவில்லை என்றும் பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலி அல்லது கரண் ஜோஹர் இயக்கும் ஹிந்திப் படத்தில்தான் அவர் நடிக்க இருக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி ஐஸ் அடுத்து சஞ்சய் குப்தா இயக்கும் படத்தில் தான் நடிக்க இருக்கிறார் என்றும், ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் அந்தப் படத்திற்கு ’ஜஸ்பா’ என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சஞ்சய் குப்தா இயக்கத்தில் கடைசியாக வந்த படம் ‘ஷூட் அட் வடாலா’. இப்படம் சென்ற ஆண்டு வெளியானது. அதை தொடர்ந்து சஞ்சய் குப்தா இயக்கும் ‘ஜஸ்பா’ படத்தில் ஐஸ் நடிக்கவிருப்பது குறித்து சஞ்சய் குப்தாவே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;