‘கத்தி’யில் நேருக்கு நேர் மோதும் இரட்டை விஜய்!

‘கத்தி’யில் நேருக்கு நேர் மோதும் இரட்டை விஜய்!

செய்திகள் 20-May-2014 12:44 PM IST Inian கருத்துக்கள்

‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வளர்ந்து வரும் படம் ‘கத்தி’. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நோக்கில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இப்படத்திற்காக பரபரப்புடன் இயங்கி வருகிறது. இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடம் ஏற்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறதாம்.

‘இளையதளபதி’ ரசிகர்களே திக்கு, முக்காடும் வகையில் ‘கத்தி’ படத்தின் ஒரு காட்சியில் இரண்டு விஜய்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறார்களாம். இந்த அதிரடி சண்டைக்காட்சியில் சண்டையிடும் இரண்டு விஜய்களும் இரு வேறு குணாதிசியங்களை கொண்டவர்களாம். இதனால் படத்தில் இந்த இரண்டு விஜய்களும் வரும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;