கூடுதலாக 50, சந்தோஷத்தில் சந்தானம்!

கூடுதலாக 50, சந்தோஷத்தில் சந்தானம்!

செய்திகள் 20-May-2014 12:32 PM IST VRC கருத்துக்கள்

சந்தானம் கதையின் நாயகனாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ஸ்ரீநாத் இயக்கிய இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அஷ்னா சவேரி நடிக்க, சித்தார்த் விபின் இசை அமைத்திருக்கிறார். பிவிபி சினிமா மற்றும் ஹான்ட் மேட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தினை தமிழகம் முழுக்க ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் இப்போது தமிழகம் முழுக்க மேலும் 50 தியேட்டர்களை அதிகப்படுத்தி, திரையிடப்பட்டு வருகிறது. சந்தானம் மூன்று கதாநாயகர்களுள் ஒருவராக நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் குவித்த வசூலை போன்று இப்படமும் நல்ல வசூலை குவித்து வருவதால், இப்படம் சம்பந்தப்பட்டவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;