வாழ்த்துக்கள் ‘வல்லவராயன்’!

வாழ்த்துக்கள் ‘வல்லவராயன்’!

செய்திகள் 20-May-2014 11:38 AM IST Chandru கருத்துக்கள்

‘சினிமாவுக்கு வரணும்னா விஜய் டிவியில சேர்ந்துட்டா போதும்’னு ஒரு பேட்டியில சிவகார்த்திகேயன் காமெடியா சொல்லியிருப்பார். அது உண்மைதான்... சந்தானம், ஜீவா, ‘நண்டு’ ஜெகன், சிவகார்த்திகேயன் தொடங்கி இன்று சினிமாவில் இருக்கும் பல பேர் விஜய் டிவியிலிருந்து வந்தவர்கள்தான். அந்த வரிசையில் இணைந்திருக்கும் இன்னொருவர் ‘அது இது எது’ புகழ் ‘மாகாபா’ ஆனந்த்.

நடிகர் கிருஷ்ணாவுக்கு தம்பியாக இவர் நடித்திருக்கும் ‘வானவராயன் வல்லவராயன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இதுதவிர ‘பஞ்சுமிட்டாய்’ எனும் படத்திலும் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார் ‘மாகாபா’. ஐந்தே படங்களில் ‘மள மள’வென தமிழ் சினிமாவில் முன்னுக்கு வந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனும் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் காம்பியராக இருந்தவர்தான். அந்த இடத்திலிருந்து சினிமாவிற்குள் ‘மாகாபா’வும் நுழைந்திருப்பதால் இவர்மீதும் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. அதெல்லாம் சரி.... வல்லவராயனுக்கு எதுக்கு வாழ்த்துக்கள் என கேட்கிறீர்களா....? இன்று அவரின் பிறந்தநாள்... அதான்! ஹேப்பி பர்த்டே ‘மாகாபா’!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரா - டிரைலர்


;