ஹிந்தியில் ரீ-மேக்காகும் 'தேசிய விருது' பெற்ற படம்!

ஹிந்தியில் ரீ-மேக்காகும் 'தேசிய விருது' பெற்ற படம்!

செய்திகள் 20-May-2014 11:31 AM IST Inian கருத்துக்கள்

தேசிய விருதுகளையும், மாநில விருதுகளையும் வாரிக்குவித்து மலையாள சினிமாவிற்கு மணி மகுடம் சூட்டிய படம் ‘ஆதாமின்டெ மகன் அபு’. இப்படம் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுகளை பெற்றுள்ளது. மத நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இப்படம் அரபி மொழியில் டப் செய்யப்பட்ட முதல் மலையாள படம். அத்துடன் துருக்கி, ஈரானிய மொழிகளிலும் ‘டப்’ செய்யப்பட்டுள்ளது.

‘ஆதாமின்டெ மகன் அபு’ படத்தின் கதை நாயகனாக நடித்த சலீம்குமாரின் நடிப்பை கண்டு உருகாதவர்களே இருக்க முடியாது. சலீம்குமார் நடிப்பில் வெளியான ‘அச்சனுறங்காத வீடு’, ‘கிராமஃபோன்’, ‘பெரு மழக்காலம்’ போன்ற படங்களின் வரிசையில் இப்படமும் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. மலையாளத்தில் இப்படத்தை பார்த்து ரசித்த முகம்மது ஹனிஃபா என்பவர் தனது ‘ஹனிஃபா மூவீஸ்’ மூலம் தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளியிடுகிறார். அத்துடன் இப்படத்தை ஹிந்தியிலும் ரீ-மேக் செய்ய இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;