சென்னையில் முகாமிடும் ‘உத்தம வில்லன்’ டீம்!

சென்னையில் முகாமிடும் ‘உத்தம வில்லன்’ டீம்!

செய்திகள் 20-May-2014 11:16 AM IST Chandru கருத்துக்கள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு வெற்றிகரமாக தன் பங்களிப்பைத் தந்த உலகநாயகன் கமல் சென்னை திரும்பிவிட்டார். கடந்த சில நாட்களாக படப்பிடிப்புக்குச் செல்லாமல் இருந்த ‘உத்தம வில்லன்’ டீம் மீண்டும் தன் பயணத்தை பரபரப்பாக நேற்று முதல் ஆரம்பித்திருக்கிறதாம். கமல், ஆன்ட்ரியா, பூஜாகுமார், நாசர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பங்குபெறும் சில காட்சிகளை சென்னையிலேயே படமாக்க இருக்கிறார்களாம். சென்னை மற்றும் பெங்களூருவில் ஏற்கெனவே சில காட்சிகளுக்கான படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஒரு பாடல் காட்சிக்காக துருக்கி நாட்டிற்கு பயணம் சென்று வந்தது ‘உத்தம வில்லன்’ டீம். தற்போது மீண்டும் சென்னையிலேயே முகாமிட்டு கிட்டத்தட்ட 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்களாம். இந்த ஷெட்யூலோடு ‘உத்தம வில்லன்’ படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.

ரமேஷ் அரவிந்த் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவர் ஜிப்ரான். திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து ‘உத்தம வில்லன்’ படத்தை தயாரிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;