ஒளிஓவியர் பிறந்த நாள் இன்று!

ஒளிஓவியர் பிறந்த நாள் இன்று!

செய்திகள் 20-May-2014 11:05 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் ஒளி ஓவியர், கேமராக் கவிஞர் என்று பல பட்டங்களுடன் திகழ்ந்து வந்த மாபெரும் கலைஞர் பாலுமகேந்திரா! இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களை எடுத்துக் கொண்டாலும், சிறந்த இயக்குனர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டாலும் அதில் பாலுமகேந்திராவின் பெயர் முன்னணியில் தான் இருக்கும்! தனது வாழ்க்கையையே சினிமாவுக்காக அர்ப்பணித்த அந்த மாபெரும் கலைஞர் இன்று நம்மிடையே இல்லை! அவர் நம்மை விட்டு பிரிந்து ஒரு சில மாதங்களே ஆகியுள்ளன! என்றைக்குமே தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இருந்து மாய்ந்துவிடாத அந்த மகா கலைஞனின் பெயர் சினிமா இருக்கும் வரை உச்சரிக்கப்படும்! அவர் கடைசியாக இயக்கி, நடித்த ‘தலைமுறைகள்’ படத்திற்கு கூட சமீபத்தில் தேசிய விருது கிடைத்தது. ஏற்கெனவே பல தேசிய விருதுகள் அவருக்கு கிடைத்திருக்கிறது என்றாலும் தான் கடைசியாக இயக்கி, நடித்த படத்திற்கு கூட கிடைத்த அந்த விருது, அந்த மகா கலைஞனின் மணிமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் ஆக அமைந்தது! அப்படிப்பட்ட அந்த மாபெரும் கலைஞன் பிறந்த நாள் இன்று! இந்நாளில் அவரை நினைவு கூர்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாலா படத்தில் ராஜாவின் ராஜாங்கம்!


;