தம்பி படத்தை பார்த்து கண்ணீர்விட்ட ஆர்யா!

தம்பி படத்தை பார்த்து கண்ணீர்விட்ட ஆர்யா!

செய்திகள் 19-May-2014 3:45 PM IST VRC கருத்துக்கள்

ஆர்யா, தன்னுடைய சொந்த பட நிறுவனமான ‘தி ஷோ பீப்புள்’ என்ற பட நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கும் படம் ‘அமரகாவியம்'. இறுதி கட்ட பணிகள் முடிந்த இப்படத்தை தயாரிப்பாளர் என்ற முறையில் ஆர்யாவும் அவருடைய ஓரிரு நண்பர்களும் பார்த்துள்ளனர். படம் முடிந்தவுடன் ஆர்யாவின் கண்களில் கண்ணீர் துளிகள் தென்பட, ஈரமான கண்களுடன் யாரிடமும் பேசாமல் அவர் திரை அரங்கை விட்டு வெளியேறி, தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக சென்றார். அதன் பின் என்ன நினைத்தாரோ, சட்டென திரும்பி வந்தவர் தனது உதவியாளரை அழைத்து 143 கேக் வாங்கி வர சொன்னார் . கேக் வந்தவுடன் தனது பட குழுவினருக்கு கொடுத்து மகிழ்ந்தார். அது என்ன 143 கேக் என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்த ஆர்யா,

‘‘ I Love you என்ற மூன்று முக்கிய வார்த்தைகளின் இன்னொரு வடிவம் தான் 143. படம் பார்த்த வினாடியே பரவசத்தில் எனக்கு தோன்றிய முதல் செய்கைதான் இது’’ என்றார். இதனை தொடர்ந்து மேலும் படம் குறித்து பேசிய ஆர்யா, ‘‘ இயக்குனர் ஜீவா ஷங்கர் இதற்கு முன்னர் ' நான்' படத்தை இயக்கியவர். தவிர என் நெருங்கிய நண்பரும் கூட! நாயகன் சத்யா என் தம்பி ஆவார். கதாநாயகி மியா ஜார்ஜ் - சத்யா ஜோடி ஒரு இனிமையான காதல் கதையை நம் கண் முன் நிறுத்தப்போவது நிஜம். ஒரு நடிகனாக நான் சினிமாவில் பல படங்களை பார்த்திருக்கிறேன். அந்த மன நிலையே வேறு. ஆனால் முதல் முறையாக ஒரு தாயாரிப்பாளர் என்ற முறையில் ‘அமரகாவியம்’ படத்தை பார்த்ததில் எனக்கு கிடைத்த பிரமிப்பும், பெருமிதமும் சொல்லில் அடங்காதவை. இந்த உணர்வு என்னை மேலும் தரமான படங்களை தர வேண்டும் என சொல்ல வைக்கிறது" என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;