சிம்புவை ‘பெண்டு’ நிமித்திய டான்ஸ் மாஸ்டர்!

சிம்புவை ‘பெண்டு’ நிமித்திய டான்ஸ் மாஸ்டர்!

செய்திகள் 19-May-2014 2:36 PM IST Chandru கருத்துக்கள்

அனுமார் வால்போல் நீண்டுகொண்டேயிருக்கும் ‘வாலு’ படத்தின் கடைசிப்பாடலுக்காக பாங்காக்கில் முகாமிட்டிருக்கிறார்கள் சிம்புவும் ஹன்சிகாவும். இப்பாடலில் சிம்புவின் நடனம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல புதுவிதமான மூவ்மென்ட்டுகளை போடச்சொல்லி சிம்புவை பாடாய்படுத்தி எடுத்துவிட்டாராம் டான்ஸ் மாஸ்டர் சதீஷ். இதைப்பற்றி ‘ட்வீட்’டியுள்ள சிம்பு, ‘‘வாலு படப்பிடிப்பில் என்னை கொல்கிறார் சதீஷ். ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு என் கால்கள் நடுங்குகின்றன. திரையில் எல்லாம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தானே!’’ எனக் கூறியிருக்கிறார்.

சிம்புவின் எல்லா படங்களிலுமே டான்ஸ் மூவ்மென்ட் எப்பவும் ஸ்பெஷலாகத்தான் இருக்கும். ‘வாலு’ படத்தில் சிம்புவே இப்படி புலம்பும் அளவிற்கு டான்ஸ் ஆட வைக்கப்பட்டிருப்பதால் கேட்கவா வேண்டும்? விடுங்க சிம்பு... அங்கதான் ‘தாய் மசாஜ்’ ரொம்ப பிரபலமாமே... போய்ட்டு வந்தா எல்லாம் சரியாகிவிடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;