அதர்வா படத்தில் ஆடும் ‘ஆரம்பம்’ அக்ஷரா!

அதர்வா படத்தில் ஆடும் ‘ஆரம்பம்’ அக்ஷரா!

செய்திகள் 19-May-2014 11:32 AM IST Chandru கருத்துக்கள்

அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த கன்னட நடிகை அக்ஷரா கௌடா, அப்படத்தில் ‘ஸ்டைலிஷ் தமிழச்சி...’ என்ற பாடலில் கிளாமர் விருந்து படைத்து ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது அதர்வா நடிக்கும் ‘இரும்புக்குதிரை’ படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடவிருக்கிறாராம். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்தும் மற்றொரு முக்கிய கேரக்டரில் லக்ஷ்மி ராயும் நடிக்கிறார்கள். பைக் ரேஸை மையமாக வைத்து கதையமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ‘ஏழாம் அறிவு’ படத்தின் வில்லனான ஜானி நியூ ட்ரினே வில்லனாக நடிக்கிறார். பாண்டிச்சேரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;