சுசீந்திரன், சுந்தர்.சி.யுடன் மீண்டும் இணையும் விஷால்!

சுசீந்திரன், சுந்தர்.சி.யுடன் மீண்டும் இணையும் விஷால்!

செய்திகள் 19-May-2014 11:13 AM IST Chandru கருத்துக்கள்

‘பாண்டியநாடு’ படத்தின் மூலம் தனக்கு திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் சுதீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ‘மத கஜ ராஜா’ படத்தைத் தொடர்ந்து சுந்திர்.சி.யுடன் மீண்டும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறாராம் விஷால். தற்போது ஹரி இயக்கத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ‘பூஜை’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தீபாவளி வெளியீடாக வெளிவரவிருக்கும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்ததும் சுசீந்திரன் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம் விஷால். தற்போது விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘ஜீவா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் சுசீந்திரன்.

‘அரண்மனை’ படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கவிருக்கும் ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தில் விமல், சிவாவோடு இன்னொரு நாயகனாக நடிக்க முதலில் சித்தார்த்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ‘மத கஜ ராஜா’ திரைப்படம் சில பிரச்சனைகளால் ரிலீஸ் தேதி தள்ளிக் கொண்டேயிருக்க, இவர்களின் கூட்டணியில் தற்போது மீண்டும் ஒரு படம் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;