ஆர்யாவின் புதிய ஜோடி!

ஆர்யாவின் புதிய ஜோடி!

செய்திகள் 19-May-2014 10:56 AM IST VRC கருத்துக்கள்

‘ஆரம்பம்’ படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் படம் ‘யட்சன்’. இந்தப் படத்தில் ஆர்யாவும் விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். ரொமான்டிக் காமெடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கன்னடத்தில் பிரபல நடிகையாக திகழும் தீபா சன்னிதி நடிக்கிறார். கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகும் தீபா சன்னிதி, ஏற்கெனவே, கன்னட ‘லுசியா’ திரைப்படத்தின் தமிழ் ரீ-மேக்கில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘யட்சன்’ அவர் தமிழில் நடிக்கும் இரண்டாவது படம். ‘யட்சன்’ படத்திற்கு விஷ்ணுவர்தனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ இசை அமைக்க, ‘ஆரம்பம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவரது தம்பி கிருஷ்ணா நடிக்கும் முதல் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;