சூர்யா, விஜய், விக்ரமுக்கு அடுத்து உதயநிதி!

சூர்யா, விஜய், விக்ரமுக்கு அடுத்து உதயநிதி!

செய்திகள் 19-May-2014 10:14 AM IST Chandru கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களின் மூலம் நாயகனாக களமிறங்கிய உதயநிதி தற்போது ‘நண்பேன்டா’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் இயக்குனர் ஏ.ஹெச்.அஹமது இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார் உதயநிதி. இப்படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்கப்போவது யார் தெரியுமா? தன் முதல் படத்தில் ஹன்சிகாவுடனும், இரண்டாவது மற்றும் மூன்றாவது படத்தில் நயன்தாராவுடனும் கூட்டணி அமைத்த உதயநிதி, தற்போது சமந்தாவை தனக்கு ஜோடியாக்கியிருக்கிறாராம்.

தற்போது சூர்யாவுடன் ‘அஞ்சான்’ படத்திலும், விஜய்யுடன் ‘கத்தி’ படத்திலும் சென்னை, ஹைதராபாத், மும்பை என பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. இப்படங்களைத் தொடர்ந்து ‘கோலிசோடா’ இயக்குனர் விஜய்மில்டன் விக்ரமை வைத்து இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்கிறாராம் சமந்தா. ‘அஞ்சான்’, ‘கத்தி’ படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்ததும் விக்ரமுடனும், உதயநிதியுடனும் படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம் அவர்.

அதோடு தனது முதல் மூன்று படங்களில் ஹாரிஸ் ஜெயராஜை இசையமைப்பாளராகப் பயன்படுத்திய உதயநிதி, ஏ.ஹெச்.அஹ்மது இயக்கும் படத்திற்காக முதல்முறையாக அனிருத்தை இசையமைக்க வைக்க இருக்கிறாராம். இப்படத்தையும் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பாகவே தயாரிக்கிறார் உதயநிதி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - டிரைலர்


;