மோடிக்காக லாரன்ஸ் உருவாக்கிய ஆல்பம்!

மோடிக்காக லாரன்ஸ் உருவாக்கிய ஆல்பம்!

செய்திகள் 19-May-2014 11:47 AM IST Chandru கருத்துக்கள்

சென்ற வருடம் ரஜினியின் பிறந்தநாளுக்காக வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்திருந்தார் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, பாரத பிரதமராக பதவியேற்க உள்ள மாண்புமிகு நரேந்திர மோடியை ‘வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர்’ என்று பாராட்டி ‘மீண்டும் ஒரு சுதந்திரம்’ என்ற இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார் லாரன்ஸ். இதுகுறித்து அவர் கூறும்போது,

‘‘இந்த ஆல்பம் உருவாவதற்கு காரணமே, இதுவரை நமது இளைஞர்களுக்கு நாம் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டுமானால் செருப்பு தைத்த ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியானதைப் பற்றி கூறுவதுதான் வழக்கமாக இருந்தது. இனி இந்தியாவில் டீ விற்ற இளைஞனும் பிரதமராக முடியும் என்று நிரூபித்த நரேந்திர மோடியை நாம் சுட்டிக் காட்டக்கூடிய தன்னம்பிக்கை சிகரமாக விளங்குபவர் நரேந்திர மோடி இதற்காகத்தான் இந்த இசை ஆல்பம்.

நான் எந்த ஒரு செயலைச் செய்தாலும் எனது குருநாதர் கே.பாலசந்தரிடம் ஆசி பெற்றுத்தான் செய்வது வழக்கம். இந்த இசை ஆல்பமும் கே.பி. சாரிடம் ஆசி பெற்றே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த இசை ஆல்பம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;