மாதவனின் இந்த புதிய கெட்-அப் எதற்கு?

மாதவனின் இந்த புதிய கெட்-அப் எதற்கு?

செய்திகள் 17-May-2014 2:15 PM IST VRC கருத்துக்கள்

மாதவன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘வேட்டை’. லிங்குசாமி இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த 2012, ஜனவரி மாதம் ரிலீசானது. இந்தப் படத்தை தொடர்ந்து இதுவரை எந்த தமிழ் படத்திலும் நடிக்காத மாதவன், வங்காள மொழியில் ரிதுபர்ணகோஷ் இயக்கிய ‘சன் கிளாஸ்’ என்ற படத்தில் மட்டும் நடித்தார்! இப்படம் வங்காளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 2013, நவம்பர் மாதம் வெளியானது. ‘வேட்டை’ படத்தைத் தொடர்ந்து கோலிவுட்டிலிருந்து விலகியிருந்த மாதவன் இப்போது வித்தியாசமான ஒரு கெட்-அப்புடன் தோற்றமளிக்கிறார். இந்த கெட்-அப் எதற்கு என்றால், பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகாம் கதையை ஹிந்தியில் படமாக்குகிறார்கள். இந்தப் படத்தில் மேரி காம் கேரக்டரில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இதில் பிரியங்கா சோப்ராவுக்கு பாக்சிங் பயிற்சியாளராக வருபவர் மாதவன் தானாம்! இந்தப் படத்திற்காக தானாம் இந்த புதிய கெட்-அப்! இந்தப் படத்திற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் பாக்சிங்கில் பயிற்சியும் பெற்றிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கில் விரைவில் கலந்துகொள்ளவிருக்கிறார் மாதவன்! இந்தப் படம் தவிர, ‘நைட் ஆஃப் தி லிவிங் டெட்’ என்ற ஒரு ஆங்கில படத்திலும் நடிக்க இருக்கிறார் மாதவன்! இந்தப் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;