ஷங்கரின் ‘ஐ’ ரிலீஸ் எப்போது?

ஷங்கரின் ‘ஐ’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 17-May-2014 11:16 AM IST VRC கருத்துக்கள்

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் பிரம்மாண்ட படமான ‘ஐ’ படத்தின் வேலைகள் முடியும் கட்டத்தில் இருப்பதாகவும், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி ஆமி ஜாக்ஸன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மிச்சம் இருப்பதாகவும், படத்தின் இசை சேர்ப்பு வேலைகள் மற்றும் கிராஃபிக்ஸ் ஒர்க்குகள் இன்னும் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. படத்தை பிரம்மாண்டமாகவும், குவாலிட்டியாகவும் தர வேண்டும் என்பதில் எந்தவித காம்பரமைஸும் செய்து கொள்ளாதவர்கள் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் ஷங்கர் என்பது எல்லோருக்கும் தெரியும்! இதனால் ‘ஐ’ வெளியாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ, ‘ஐ’ லேட் ஆனாலும், லேட்டஸ்டாக வந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;