‘‘வாழ்க இந்தியா! வளர்க தமிழகம்!’’ - விஜய்

‘‘வாழ்க இந்தியா! வளர்க தமிழகம்!’’ - விஜய்

செய்திகள் 17-May-2014 10:08 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ்நாட்டில் பிரச்சாத்திற்காக நரேந்திர மோடி வந்தபோது நடிகர்கள் ரஜினிகாந்தையும், விஜய்யையும் சந்தித்தார். தற்போது நடந்துமுடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள மாண்புமிகு நரேந்திர மோடிக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் நடிகர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பிஆர்ஓ பி.டி.செல்வகுமார். அதன் விவரம்...

’’என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கு வணக்கம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்திய அளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய திருமிகு. நரேந்திரமோடிக்கும், தமிழகத்தின் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலக அளவில் பெரும் சக்தியாக திகழும் இந்த இரு தலைவர்களும் உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாகவும், இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றிக் காட்டுவார்கள் என்ற கோடானு கோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்த வெற்றியை எண்ணி சந்தோஷமடைகிறேன்.

வாழ்க இந்தியா! வளர்க தமிழகம்!’’

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;