பாலா, அதர்வாவுடன் இணையும் சற்குணம்!

பாலா, அதர்வாவுடன் இணையும் சற்குணம்!

செய்திகள் 16-May-2014 4:06 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாலா தனது ’பி ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கிய படம் ‘பரதேசி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு’ என்ற படத்தை தயாரிக்கிறார் பாலா. இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது! இதனை தொடர்ந்து பாலா ‘களவாணி’, ‘வாகைச்சூடவா’, ‘நய்யாண்டி’ ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் மற்றுமொரு படத்தையும் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்தப் படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இமைக்கா நொடிகள் - டீஸர்


;