ஜூன் 6-ல் பிரகாஷ்ராஜ் விருந்து!

ஜூன் 6-ல் பிரகாஷ்ராஜ் விருந்து!

செய்திகள் 16-May-2014 12:51 PM IST VRC கருத்துக்கள்

வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வருபவர் பிரகாஷ்ராஜ். இவர் தற்போது இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ’உன் சமையலறையில்’. இந்தப் படம், ஆஷிக் அபு இயக்கத்தில் லால், ஸ்வேதா மேனன் நடிப்பில் வெளிவந்த ‘சால்ட் அன்ட் பெப்பர்’ என்ற மலையாளப் படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜுடன் முதன் முதலாக சினேகா இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் சென்சார் ஆன இப்படம் ‘யு’ சான்றிதழைப் பெற்றுள்ளது. பிரகாஷ்ராஜின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஜூன் மாதம் 6-ம் தேதி வெளியாகி விருந்து படைக்கவுள்ளது. அத்துடன் இப்படம் தெலுங்கிலும், கன்னடத்திலும் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;