சசிகுமார், வரலட்சுமி நடனப் பயிற்சி!

சசிகுமார், வரலட்சுமி நடனப் பயிற்சி!

செய்திகள் 16-May-2014 11:52 AM IST VRC கருத்துக்கள்

சசிகுமார், வரலட்சுமி இணைந்து நடிக்கவுள்ள படம் ‘தாரை தப்பட்டை’. அழுத்தமான படங்களாகவே கொடுத்து வரும் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் படம் தான் இது. கரகாட்டம் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கான 12 பாடல்களை 6 நாட்களில் இசையமைத்து கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா. தற்போது இதில் ஒரு பாடலுக்கான நடன பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள் சசிகுமாரும், வரலட்சுமியும்! பல்வேறு நடனங்களில் வரலட்சுமி தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவருக்கு கரகாட்டத்தில் பயிற்சி இல்லை. எனவே சசிகுமார், வரலட்சுமி இருவரும் கரகாட்ட பயிற்சியினை தொடங்கியுள்ளனர். மேலும் இப்படத்திற்காக 10 கிலோ வரை தனது எடையை குறைக்கவும் செய்துள்ளார் வரலட்சுமி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;