ப்ருத்திவிராஜ் மீது வழக்கு!

ப்ருத்திவிராஜ் மீது வழக்கு!

செய்திகள் 16-May-2014 10:28 AM IST VRC கருத்துக்கள்

தமிழில் தற்போது ‘காவியத்தலைவன்’ படத்தில் நடித்து வரும் ப்ருத்திவிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாள படம் ‘செவன்த் டே’. இந்தப் படத்தில் டேவிட் ஆப்ரகாம் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்திருக்கும் ப்ருத்திவிராஜ் படத்தில் மது அருந்துவது மாதிரியான காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆனால் சினிமாவில் புகை பிடிப்பது, மது அருந்துவது மாதிரியான காட்சிகள் இடம்பெறும்போது மத்திய அரசின் சட்ட விதிகளின்படி எச்சரிக்கை வாசகங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இப்படத்தில் அதுபோன்ற வாசகங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதையடுத்து மது அருந்தும் காட்சிகளில் நடித்த ப்ருத்திவிராஜ், படத்தின் இயக்குனர் ஷியாம் சுந்தர், தயாரிப்பாளர் சுசீலன், ப்ருத்திவிராஜ் கூட மது அருந்தும் காட்சிகளில் நடித்த சக நடிகர்கள் ஆகியோர் மீது கேரளாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியத்தலைவன் வாலி பாடல் மேக்கிங் வீடியோ


;