‘திக் திக்’ மலைப்பயணத்துடன் உருவாகும் ‘8 எம்.எம்.’!

‘திக் திக்’ மலைப்பயணத்துடன் உருவாகும் ‘8 எம்.எம்.’!

செய்திகள் 15-May-2014 2:53 PM IST Inian கருத்துக்கள்

மலேசியத் தமிழரான இயக்குனர் அமீன், மலாய் மற்றும் தமிழ் மொழிகளில் இதுவரை 12 படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது ‘8 எம்.எம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘மைன்ட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஜெயராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் நிர்மலும், திவ்யாவும் நாயகன், நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படம் பற்றி பேசிய இயக்குனர் அமீன், ‘‘வெளிநாட்டிலிருந்து மலைப்பிரதேசங்களின் வழியாக பயணம் செய்து இந்தியாவிற்குள் வரும் ஒரு காதல் ஜோடியைப் பற்றிய படம்தான் இந்த 8 எம்.எம்.! அந்தப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதிலிருந்து மீள அவர்கள் மேற்கொள்ளும் சாகஸங்களையும் பற்றிய சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படத்தை உருவாக்கி வருகிறோம்.

ஏற்காடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய இடங்களில் உள்ள மலைப்பிரதேசங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். காட்சிகள் துல்லியமாகப் படம்பிடித்து மலைப்பிரதேசங்களை ரசிகர்களின் கண்முன்னே கொண்டு வருவதற்காக ரெட், ‘5டி’ ஹெலி கேம் போன்ற நவீன ரக கேமராக்களைக் கொண்டு படமாக்கி வருகிறோம். தமிழ்ப் படங்களில் வழக்கமாக இடம்பெறும் பல விஷயங்களை தகர்த்து இப்படத்தை உருவாக்கி வருவதாலும், திரைக்கதையில் புது உத்தியைப் பயன்படுத்தியிருப்பதாலும் இப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;