பால்கி படத்தில் தனுஷின் வித்தியாசமான கேரக்டர்!

பால்கி படத்தில் தனுஷின் வித்தியாசமான கேரக்டர்!

செய்திகள் 15-May-2014 3:07 PM IST VRC கருத்துக்கள்

‘ராஞ்சனா’ எனும் தனது முதல் ஹிந்திப் படத்தின் மூலமே பாலிவுட்டிலும் தனக்கான ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர் தனுஷ்! இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டின் பிரபல இயக்குனர் பால்கி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்! இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அக்‌ஷரா கமல்ஹாசன் நடிக்க, இளையராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. பாலிவுட்டின் ‘பிக் பி’ என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் இப்படத்தில் தனுஷ் கண் பார்வையற்றவராக, ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக வித்தியசமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது! அத்துடன் இந்தப் படத்தில் பாலிவுட்டின் பிரபல இயக்குனர்களான ராஜ்குமார் இரானி, ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா, கரண் ஜோஹர், அனுராக் பாசு, கௌரி ஷிண்டே ஆகியோரும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்களாம்! கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்து, அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;