அஜித்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

அஜித்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

செய்திகள் 15-May-2014 3:21 PM IST Inian கருத்துக்கள்

‘ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ்’ சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா நடிக்கும் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி தொடங்கப்பட்டது. ஈ.சி.ஆர். மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிதும் இடைவெளியின்றி நடந்துவந்த இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இப்படக் குழுவினர் இன்று இரண்டாவது கட்டப் படப்பிடிப்பை மீண்டும் சென்னையிலேயே தொடங்கியுள்ளனர். இதில் விவேக், அஜித் சம்பந்தபட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அக்னி வெயில் உச்சக் கட்டத்தை அடைந்து வரும் நிலையிலும் இப்படம் சம்பந்தபட்ட காட்சிகள் திறந்த வெளியிலேயே படமாக்கப்பட்டு வருகிறதாம்! கடுமையான வெயிலை பொருட்படுத்தாமல் அஜித் நடித்ததை பார்த்து படக் குழுவினர் வியந்துள்ளனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;