ஹேப்பி பர்த்டே சந்தோஷ் நாராயண்!

ஹேப்பி பர்த்டே சந்தோஷ் நாராயண்!

செய்திகள் 15-May-2014 12:14 PM IST VRC கருத்துக்கள்

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி, தனது முதல் படத்தின் மூலமே தனக்கான ஒரு முத்திரை பதித்தவர் சந்தோஷ் நாராயண்! இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘பீட்சா 2 தி வில்லா’, ‘குக்கூ’ என பல படங்களுக்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணின் இசை இந்த படங்களின் வெற்றிக்கு பெரிதும் உதவின என்றால் அது மிகையாகாது. அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்கள் வரிசைக்கு வந்துள்ள சந்தோஷ் நாராயண் இசை அமைப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கிற படம் ’ஜிகர்தண்டா’. இப்படத்தின் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சந்தோஷ் நாராயணனுக்கு இன்று சந்தோஷமான நாள்! அதாவது அவருக்கு இன்று பிறந்த நாள்! சந்தோஷ் நாராயணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - டீசர்


;