இயக்குனர்களுக்கு வாரி வழங்கிய பாரிவேந்தர்!

இயக்குனர்களுக்கு வாரி வழங்கிய பாரிவேந்தர்!

செய்திகள் 15-May-2014 12:11 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எஸ்.ஆர்.எம்.குழும நிறுவனத்தின் தலைவர் 'பாரிவேந்தர்' பச்சைமுத்து இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்கினார். இதற்கு இயக்குனர் சங்கம் நன்றி தெரிவித்து பாராட்டும் நிகழ்ச்சி நேற்று, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளார் வி.சேகர், இயக்குனர் சிகரம் பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாரிவேந்தரை பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் விக்ரமன் பேசும்போது, ‘‘சங்கத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் உடல்நிலை சரியில்லாமல் சரியான சிகிச்சை மற்றும் பண வசதியில்லாமல் கஷ்டப்பட்டபோது, சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து பி.வாசு மற்றும் முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து பாரிவேந்தரிடம் சென்று உதவி கேட்டோம். அதைக் கேட்டவுடனே எந்தவித தயக்கமுமின்றி உதவி செய்ய சம்மதித்தார். மேலும் இயக்குனர் சங்கத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இலவச மருத்துவ உதவி காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தினார். அத்துடன் உறுப்பினர்கள் குறும்படம் எடுப்பதற்கு கேமரா, எடிட்டிங் யூனிட் உள்ளிட்ட கருவிகளை வழங்கியுள்ள அவருக்கு ஒட்டுமொத்த உறுப்பினர்களும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்’’ என்றார்.

அத்துடன் சங்க உறுப்பினரின் மனைவி மகபேறுக்கு எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்று கொண்டால், அந்தக் குழந்தைக்கு நன்கொடையாக 10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;