‘சந்திரமுகி’, ‘அருந்ததி’ வரிசையில் அரண்மனை!

‘சந்திரமுகி’, ‘அருந்ததி’ வரிசையில் அரண்மனை!

செய்திகள் 15-May-2014 11:07 AM IST VRC கருத்துக்கள்

இது, திகில் படங்களின் சீசன் போலும்! இந்த வரிசையில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ’யாமிருக்க பயமே’. பாழடைந்த ஒரு பங்களாவின் பின்னணியில் சொல்லப்படும் திகில் கதை இது! ஏற்கெனவே இதே பின்னணியில், ’சந்திரமுகி’, ’அருந்ததி’ போன்ற பல படங்கள் வெளிவந்து ஹிட் ஆகியுள்ள நிலையில் அதே வரிசையில் அடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் படம் ’அரண்மனை’. சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படமும் ஒரு பழைய அரண்மனையின் பின்னணில் சொல்லப்படும் திகில் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி, ஆன்ட்ரியா, லட்சுமி ராய், வினய், சந்தானம் முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்க, சுந்தர்.சி.யும் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.

இந்தப் படத்தில் முக்கியமாக இடம் பெறும் அரண்மனைக்காக பல இடங்களில் தேடியிருக்கிறார்கள் சுந்தர்.சி.யின் உதவியாளர்கள்! ஆனால் நினைத்தது மாதிரியான பங்களா எங்கும் அமையவில்லையாம். இதனால் ஹைதராபாத்தில் அரண்மனை போன்ற மிகப் பிரம்மாண்டமான செட்டை அமைத்து, முழுக்க முழுக்க அந்த செட்டில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் சுந்தர்.சி. கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் செல்வில் தயாரான இந்த செட்டை உருவாக்க கிட்டத்தட்ட 400 தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றினார்களாம். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சந்தானம், கோவை சரளா, மனோபாலா முதலானோரின் காமெடி காட்சிகள் ஹைலைட் ஆக இருக்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;