‘மான் கராத்தே’ தயாரிப்பாளருடன் இணையும் எஸ்.ஆர்.பிரபாகரன்!

‘மான் கராத்தே’ தயாரிப்பாளருடன் இணையும் எஸ்.ஆர்.பிரபாகரன்!

செய்திகள் 15-May-2014 10:07 AM IST VRC கருத்துக்கள்

சசிகுமார், லடசுமி மேனன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’, உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா ஜோடியாக நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்த இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் அடுத்து ’மான் கராத்தே’ உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளதாக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனே தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;