சமந்தாவின் தாய் வீடு?

சமந்தாவின் தாய் வீடு?

செய்திகள் 14-May-2014 12:33 PM IST VRC கருத்துக்கள்

தெலுங்கின் பிரபல இயக்குனர் வி.வி.வினாயக் இயக்கும் பெயரிடப்படாத ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நேற்று முன் தினம் கேரளாவிலுள்ள ஆலப்புழாவில் நடந்தது. இந்தப் படத்தில் புதுமுகம் சாய் சீனிவாஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்திற்காக சமந்தா சம்பந்தப்பட்ட ஒரு சர்ச் காட்சியை அங்குள்ள ஒரு பிரபல கிருஸ்தவ தேவாலயத்தில் படமாக்கப்பட்டது. இந்த தேவலாயத்தில் சமந்தா நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீ-மேக் ஆன ‘யே மாய சேசாவா’ படத்தின் ஹீரோயின் சமந்தா தான்! இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே இதே சர்ச்சில் நடந்துள்ளது. அப்போது அதன் படப்பிடிப்புக்காக இந்த சர்ச்சுக்கு வந்துள்ளார் சமந்தா! இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் அதே சர்ச்சுக்கு வந்துள்ளார்.

அங்கு சமந்தா சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்ததும், அங்கு கூடியிருந்த மீடியாகாரர்களிடம் பேசினார் சமந்தா! அப்போது, ‘‘இந்த ஆலப்புழா ஊருக்கும் என் குடுமபத்திற்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது. என் அம்மாவின் சொந்த ஊர் இதுதான்! இந்த ஊருக்கு வந்தபோது என் தாய் வீட்டுக்கு வந்தது மாதிரி உணர்கிறேன். என்னிடம் மலையாள படங்களில் நடிக்க மாட்டீர்களா என்று கேட்கிறார்கள்! எனக்கு மலையாள படங்களில் நடிக்க நிறைய அழைப்புகள் வருகிறது. நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. மற்ற மொழிப் படங்களை விட மலையாள படங்களில் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கண்டிப்பா நானும் மலையாளத்தில் நடிப்பேன். அது சம்பந்தமான பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திசண்டை - டிரைலர்


;