கௌதம் மேனன் - சிம்பு படத்தின் டைட்டில்?

கௌதம் மேனன் - சிம்பு படத்தின் டைட்டில்?

செய்திகள் 14-May-2014 10:34 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனனின் படங்கள் மட்டுமல்ல, அவர் படங்களின் தலைப்புகளும் எப்போதும் கவித்துவமாகவே இருக்கும். ‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நடுநிசி நாய்கள்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ என அவரின் இயக்கத்தில் வெளிவந்த அத்தனை படங்களின் டைட்டில்களும் சுத்தமான தமிழில் வைக்கப்பட்டிருப்பது இன்னுமொரு சிறப்பு. அவர் ஒரு படத்தை இயக்கப்போகிறார் என்றால், அந்தப் படத்தின் கதை எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்வதற்கு எவ்வளவு ஆர்வம் ஏற்படுமோ, அதைப்போலவே படத்திற்கு என்ன தலைப்பு வைப்பார் என்பதையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள் ரசிகர்கள். தற்போது அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்தையும், சிம்பு நடிப்பில் ஒரு படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம்.

அஜித் நடிக்கும் படத்திற்கு ‘சத்யதேவ்’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல், சிம்பு நடிக்கும் படத்திற்கு ‘சற்றென்று மாறுது வானிலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், படத்திற்கு அந்தத் தலைப்பு இல்லை என கௌதமே ட்விட்டரில் விளக்கம் கொடுத்தார். அப்படியென்றால் படத்திற்கு வேறு என்ன தலைப்பை கௌதம் வைக்க இருக்கிறார் அவரின் என நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது, அதைவிட ஒரு அற்புதமான டைட்டிலை படத்திற்கு அவர் வைத்திருப்பது தெரியவந்தது.

அந்த தலைப்பு என்ன தெரியுமா? எம்.ஜி.ஆர். நடிப்பில் 1965ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன ‘கலங்கரை விளக்கம்’ படத்திற்காக கவிஞர் வாலி எழுதிய புகழ்பெற்ற பாடல் வரியான ‘காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்’ என்பதுதான் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் டைட்டிலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;