5 லட்சம் இளைஞர்களில் ஒருவன்!

5 லட்சம் இளைஞர்களில் ஒருவன்!

செய்திகள் 14-May-2014 10:30 AM IST Inian கருத்துக்கள்

கருமாரி நிறுவனம் சார்பில் பி.கே.முத்துக்குமார், வி. செந்தில் குமார் தயாரிக்கும் படம் ‘மனம் மயங்குதே’. விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் பணிபுரிந்த கே.வி. ராஜீவ் முதல் படமாக இப்படத்தை இயக்குகிறார். ‘ராட்டினம்’ லகுபரன், ரியா இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கே.வி.ராஜீவ் கூறும்போது, ‘‘பொதுவாக மனம் மயங்குதுன்னு சொன்னாலே அது காதல்னு நினைப்போம். ஆனால் காதலைத் தவிர இன்னொரு விஷயத்தை யதார்த்தமா சொல்லியிருக்கிறோம்

‘ராட்டினம்’ லகுபரன் சென்னை குடிசைப் பகுதியில் வாழ்ந்து கொரியர் வேலை செய்யும் இளைஞன். அவனுக்கு வாழ்க்கையில் ஒரு கஷ்டம் வருகிறது. அந்த நிலையில் அவன் எடுக்கும் ஒரு முடிவு அவனை எங்கே கொண்டு செல்கிறது. அது என்ன என்பதை வித்தியாசமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

தமிழ்நாட்டுல இன்றைக்கு 5 லட்சத்திற்கும் மேலான இளைஞர்கள் ஒரு விஷயத்தால பாதிக்கப்பட்டுகிட்டிருக்காங்க. அதுல ஒரு இளைஞன் தான் என்னோட படத்தோட கதை நாயகன். இது, நான் அருகிலிருந்து பார்த்த எனது நண்பனின் கதைன்னு கூட சொல்லலாம்.

இதுவரைக்கும் நான் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்தது கிடையாது. ஆனால் விஷுவல் எஃபெக்ட்ஸ் டெக்னீஷியனாக பல படங்களில் பணிபுரிந்ததால் நிறைய இயக்குனர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைக்கொண்டே இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் வேளச்சேரி, அசோக் நகர், கே.கே.நகர். உள்ளிட்ட பல ஸ்லம் ஏரியாவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;