டீச்சரானார் சுகன்யா!

டீச்சரானார் சுகன்யா!

செய்திகள் 14-May-2014 10:27 AM IST VRC கருத்துக்கள்

'மலர்விழி புரொடக்‌ஷன்ஸ்’ பட நிறுவனம் சார்பாக டி.ரஞ்சித்குமார், ஏ.எம்.தேவகுமாருடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நாகர்கோவில் சந்திப்பு’. இந்தப் படத்தில் மகேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஜோதிகிருஷ்ணா நடிக்கிறார். படத்தின் முக்கியமான டீச்சர் கதாபாத்திரத்தில் சுகன்யா நடிக்கிறார். ஜான்பீட்டர் வசனம் எழுத, கதை எழுதி இயக்குகிறார் ஜி.ஜீ.அசோகன்.

‘நாகர்கோவில் சந்திப்பு’ படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, ‘‘பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் படிக்காமல் எதிர்கால சிந்தனை இல்லாமல் இருகிறார்கள். அவர்கள் மட்டுமின்றி மற்ற மாணவர்களையும் இடையூறு செய்கிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்த முயலும் டீச்சர் சுகன்யாவை மாடியிலிருந்து தள்ளிவிடுகின்றனர்.

சுகன்யாவின் நிலை என்ன? அந்த குற்றத்திலிருந்து மாணவர்கள் தப்பித்தார்களா? மாணவர்கள் வெற்றி பெற்றார்களா? என்பதே கதை! கண்டிப்பான, அன்பான டீச்சராக கதைக்கு மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார் சுகன்யா. படத்தின் பெரும்பகுதி நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளிவரும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;