ஒரே படத்தில் சித்தார்த், ஹன்சிகா, விமல், சிவா!

ஒரே படத்தில் சித்தார்த், ஹன்சிகா, விமல், சிவா!

செய்திகள் 13-May-2014 3:54 PM IST Chandru கருத்துக்கள்

சுந்தர்.சி படம் என்றாலே எப்போதும் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. அப்படியிருக்கும்போது, அவர் எடுக்கும் படத்தின் பெயரே ‘கலகலப்பு’ என்றிருந்தால்... காமெடிக்கு சொல்லவா வேண்டும்? விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் என ‘மல்டி ஸ்டார்ஸ்’ நடிப்பில் சுந்தர்.சி இயக்கி கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘கலகலப்பு’ படம் அந்த வருடத்தின் அதிக லாபம் தந்த படமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் எடுக்கப்படலாம் என அப்போதிலிருந்தே ஒரு பேச்சு அடிபட்டு வந்தது. தற்போது அதற்கான முழு வேலைகளில் இறங்கிவிட்டாராம் சுந்தார்.சி.

‘கலகலப்பு 2’வாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ஏற்கெனவே நடித்த விமல், ‘மிர்ச்சி’ சிவா ஆகியோருடன் தற்போது சித்தார்த்தும் இணைந்திருக்கிறாராம். அதேபோல், ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா இப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம். விமல், சிவாவுக்கான நாயகிகள் வேட்டை பரபரப்பாக நடந்து வருகிறது என்கிறார்கள். மற்ற விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படுமாம்.

தற்போது ‘அரண்மனை’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் சுந்தர்.சி., இப்படத்தை ஜூனில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். ‘அரண்மனை’ பட வெளியீட்டிற்குப் பின்னர் ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்குமாம். அதேபோல், வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘காவியத்தலைவன்’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய இருக்கிறதாம். இதனால் சித்தார்த்தும் ஜூனுக்குப் பிறகு ‘கலகலப்பு 2’ படத்தில் நடிக்க முழுதாக ரெடியாகிவிடுவார் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;