அப்பர்சாமி கோயிலில் சரத்குமாரின் சண்டமாருதம்!

அப்பர்சாமி கோயிலில் சரத்குமாரின் சண்டமாருதம்!

செய்திகள் 13-May-2014 5:27 PM IST VRC கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை தந்த கூட்டணி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் – சரத்குமார்! இந்த கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. ‘மேஜிக் ஃப்ரேம்ஸ்’ வழங்க, சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘சண்டமாருதம்’ என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கெனவே பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள சரத்குமார், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். ’தடைகளை உடை’ என்ற அடைமொழியுடன் உருவாகும் இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நாளை (14-5-2014) சென்னை மைலாப்பூரிலுள்ள அப்பர் சாமி கோயிலில் நடைபெறவிருக்கிறது. இப்படம் ஆக்‌ஷன் கலந்த ஜனரஞ்சக படமாக பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;