ஹிந்து, கிறிஸ்துவ முறைப்படி விஜய் – அமலா பால் திருமணம்!

ஹிந்து, கிறிஸ்துவ முறைப்படி விஜய் – அமலா பால் திருமணம்!

செய்திகள் 13-May-2014 11:34 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் திருமணம் விரைவில் நடைபெறவிருப்பதால் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை முடித்துக் கொடுப்பதில் பிசியாக இருக்கிறார் அமலா பால்! மோகன்லாலுடன் ‘லைலா ஓ லைலா’, நிவின் பாலியுடன் ’மிலி’ ஆகிய மலையாள படங்களிலும், தமிழில் தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திலும் நடிக்கும் அமலா பால், தற்போது திருவனந்தபுரத்தில் நடந்து வரும் ‘மிலி’ மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இயக்குனர் விஜய், அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி கேரளாவிலுள்ள பிரபலமான ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து திருமணம் ஹிந்து முறைப்படி வருகிற 12- ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர் 2


;