சகோதரர்களின் உணர்வை மதிக்கிறேன்! - சிவகுமார்

சகோதரர்களின் உணர்வை மதிக்கிறேன்! - சிவகுமார்

செய்திகள் 13-May-2014 5:37 PM IST VRC கருத்துக்கள்

தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பொன்னி வள – வீர சரித்திரம்’ தொடர் சம்பந்தமாக நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் விவரம் வருமாறு:
’பொன்னி வள - வீர சரித்திரம்’ தொடர் நிறுத்தப்படுகிறது!

இந்தத் தொடரில் சில மணித்துளிகள் மட்டுமே பின்னணிக் குரல் கொடுத்துள்ள நான், எந்த ஒரு இனத்தின் மனதையும் புண்படுத்தும் வகையில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பது ‘பொன்னி வள - வீர சரித்திரம்’ தொடரை பார்த்தவர்களுக்கு நன்கு புரியும். எப்படியிருப்பினும், நான் பிறந்த கொங்கு மண்ணில் வாழும் சகோதர இனத்தவர்களுக்கு இந்தத் தொடர் சிறிது வருத்தத்தை அளித்திருப்பதை உணர்கிறேன். அந்தச் சகோதரர்களின் உணர்வை மதிக்கின்ற வகையில், தந்தி தொலைக்காட்சியினரிடம் பேசி, இத்தொடரின் ஒளிபரப்பை இத்துடன் நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுள்ளேன். ‘பொன்னி வள - வீர சரித்திரம்’ தொடரினை நிறுத்தி விடுவதாக அவர்களும் உறுதி கூறியுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;