பிரான்சுக்கு செல்லும் கமல்ஹாசன்!

பிரான்சுக்கு செல்லும் கமல்ஹாசன்!

செய்திகள் 13-May-2014 10:37 AM IST VRC கருத்துக்கள்

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நாளை (14-5-2014) பிரான்ஸ் நாட்டில் துவங்குகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக கமல்ஹாசன் பிரான்ஸ் செல்கிறார். உலகம் முழுவதும் பலவேறு நாடுகளில் தயாரான திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படும். இதில் போட்டி பிரிவு, போட்டியில்லாத பிரிவு, மரியாதை நிமித்தமான பிரிவு என மூன்று பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது. இந்த விழாவில் கலை, அழகியல் நிறைந்த சிறந்த படங்களுக்கான போட்டியும் நடைபெறும். சிறந்த படத்துடன் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது. வருகின்ற 25- ஆம் தேதி வரை பிரான்ஸில் நடைபெறவுள்ள இந்த விழாவில் இந்தியாவிலிருந்து ‘டிட்லி’ என்ற ஒரு ஹிந்தி மொழிப் படம் மட்டும் திரையிடப்படுகிறது. மரியாதை நிமித்தமான் பிரிவில் திரையிடப்படும் இந்தப் படத்தை கானு பெல் இயக்கியிருக்கிறார். கமல்ஹாசன் தவிர இன்னும் சில இந்திய சினிமா பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;