சித்தார்த் - சமந்தாவை தமிழில் இணைக்கும் இயக்குனர்!

சித்தார்த் - சமந்தாவை தமிழில் இணைக்கும் இயக்குனர்!

செய்திகள் 13-May-2014 10:20 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னாச்சு....’ என்ற ஒரு வார்த்தையை வைத்தே மொத்த படத்தையும் சுவாரஸ்யப்படுத்திய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணீதரன் அடுத்த கதையை ரெடி பண்ணிவிட்டாராம். இப்படத்தில் சித்தார்த் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் சமந்தா. இருந்தாலும், தமிழில் சித்தார்த்துக்கு ஜோடியாக முதல்முறையாக நடிப்பது பாலாஜி தரணீதரன் இயக்கவிருக்கும் படத்தில்தான். இப்படத்தைப் பற்றிய மற்ற விவரங்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்கிறார்கள்.

தற்போது, சூர்யாவுடன் ‘அஞ்சான்’, விஜய்யுடன் ‘கத்தி’ ஆகிய படங்களில் பரபரப்பாக நடித்துவரும் சமந்தாவிடம், ‘கோலிசோடா’ இயக்குனர் விஜய்மில்டன் விக்ரமை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ‘அஞ்சான்’, ‘கத்தி’ படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்ததும், பாலாஜி தரணீதரன் இயக்கும் படத்திலும், விஜய்மில்டன் இயக்கும் படத்திலும் சமந்தா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;