அஜித்துடன் மீண்டும் இணையும் ‘வீரம்’ சிவா!

அஜித்துடன் மீண்டும் இணையும் ‘வீரம்’ சிவா!

செய்திகள் 13-May-2014 10:01 AM IST Chandru கருத்துக்கள்

இந்த வருடப் பொங்கலை ‘தல பொங்கலா’க மாற்றி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்த ‘வீரம்’ சிவா, மீண்டும் அஜித்திற்காக ஒரு கதை சொல்லியுள்ளாராம். ‘வீரம்’ தந்த வெற்றியாலும், சிவா சொன்ன இந்தக் கதை மிகவும் பிடித்துப் போனதாலும் ‘டபுள் ஓ.கே.’ சொல்லி இப்படத்தில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்துவிட்டாராம் தல. அனேகமாக இப்படத்தை தயாரிக்கப்போவது ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனமாக இருக்கலாம் என்கிறார்கள். அஜித்துக்கு ஜோடி, படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், டெக்னிக்கல் டீம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமாம்!

தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘சத்யதேவ்’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் அஜித், இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்ததும் சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். ‘சத்யதேவ்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளை வெளியில் நடத்தியபோது, அஜித்தைப் பார்ப்பதற்கு பெரும் கூட்டம் கூடியதால், தற்போது இப்படத்திற்காக பிரத்யேக செட் ஒன்றை அமைத்து முழுப்படப்பிடிப்பையும் அங்கேயே நடத்திவிடலாமா என யோசித்து வருகிறார்களாம். அதேபோல், இப்படத்தின் இரண்டாவது கேரக்டருக்கான அஜித்தை, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் கௌதம் மேனன் காட்டுவார் என ‘தல’ ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;