ஷாருக் முதல் சந்தானம் வரை!

ஷாருக் முதல் சந்தானம் வரை!

செய்திகள் 12-May-2014 5:29 PM IST VRC கருத்துக்கள்

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் திரையுலகினர் பரவசம் அடைந்துள்ளனர். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சவேரியின் அலை பேசியில் வரும் குறுந்தகவல்களும், அழைப்பும் படத்தை பற்றியும் அவரையும் புகழ்ந்து வருகிறதாம்! விளம்பர துறையில் ஆர்வமுள்ள இவர் பணியாற்றிய ஒரு முக்கிய விளம்பரம் ஷாருக் கான் உடன் நடித்தது. ஷாருக்கை பற்றி பேசினாலே துள்ளி குதிக்கும் ஆஷ்னா, தன்னுடைய கதாநாயகன் சந்தானத்தை பற்றி பேசும் போதும் உற்சாகமாகிறார்.

‘‘அவருடைய timing sense பிரமிப்புக்குரியது. படப்பிடிப்பில் அவர் காட்டும் தொழில் சிரத்தை தான் அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணம்’’ என்கிறார் அஷ்னா சவேரி. இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம். பெல்லி டான்ஸ் எனும் வகை நடனத்தை முறையாக கற்று கொண்டுள்ளார் அஷ்னா! மேலும் அவர் கூறும்போது,

‘‘நான் சினிமாவில் நடிக்க வருவேன் என்றோ, அதிலும் தமிழ் சினிமாவில் நடிப்பேன் என்றோ கனவில் கூட கண்டதில்லை. தமிழ் ரசிகர்கள் எப்பவுமே திறமையான புதுமுகங்களை ஆதரிப்பார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் ‘பி.வி.பி ஃபிலிம்ஸ், இயக்குனர் ஸ்ரீநாத், மற்றும் சந்தானம் அவர்களுக்கு மிகக் கடமை பட்டுள்ளேன்’’ என்கிறார் அஷ்னா சவேரி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;