’அம்புலி’ டீமின் அடுத்த படம் ’ஆ’

’அம்புலி’ டீமின் அடுத்த படம் ’ஆ’

செய்திகள் 12-May-2014 2:05 PM IST VRC கருத்துக்கள்

'அம்புலி 3 D' படத்தை உருவாக்கிய படக்குழுவினரின் அடுத்த தயாரிப்பு ‘ஆ’. இப்படத்தை இரட்டை இயக்குனர்களான ஹரி - ஹரேஷ் இயக்குகிறார்கள். ‘‘வித்தியாசமான ஐந்து தளத்தில் நடக்கும் திகில் கதை இது! ஜப்பான், துபாய், ஆந்திராவில் ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை, வங்க கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் ஒரு கிராமத்திலுள்ள A T M ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு தான் இப்படம் . ஆவி உலகை பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் எங்கும் சுற்றி வர , அதில் அவர்களுக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவங்களை திகிலுடன் சித்தரிக்கும் இப்படத்தில் 'அம்புலி’ கணேஷ், சிம்ஹா, மேக்னா, பாலா, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படன் அடுத்த மாத வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது’’ என்கிறார்கள் இப்படத்தினை இயக்கியுள்ள ஹரி – ஹரேஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;