’தாரை தப்பட்டை’ முடிந்த பிறகே அடுத்த படம்!

’தாரை தப்பட்டை’ முடிந்த பிறகே அடுத்த படம்!

செய்திகள் 12-May-2014 11:03 AM IST VRC கருத்துக்கள்

தமிழில் ‘போடா போடி’, கன்னடத்தில் ’மானிக்யா’ படங்களை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘மதகஜராஜா’ இன்னும் ரிலீசாகவில்லை! இந்தப் படங்களை தொடர்ந்து வரலட்சுமி நடிக்கும் படம் பாலாவின் ’தாரை தப்பட்டை’ கரகாட்டத்தின் பின்னணியில் எடுக்கப்படும் இப்படத்தில் கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இந்தப் படத்திற்காக தற்போது கரகம் கற்று வருகிறார் வரலட்சுமி! இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தஞ்சாவூரில் ஆரம்ப மாகவுள்ளது. பாலா இயக்கும் படம் இது என்பதால் இப்படத்திற்காக நிறைய நாட்களை ஒதுக்கி வைத்துள்ள வரலட்சுமி, இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகே அடுத்த படங்களை கமிட் செய்வாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;