சினிமாவிலும் தடம் பதிக்கும் ஸ்ரீசாந்த்!

சினிமாவிலும் தடம் பதிக்கும் ஸ்ரீசாந்த்!

செய்திகள் 12-May-2014 10:38 AM IST VRC கருத்துக்கள்

கிரிக்கெட் விளையாட்டில் பிரபலமான ஸ்ரீசாந்த், இந்த விளையாட்டு சம்பந்தமாக எழுந்த சில சர்ச்சைகளிலும் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டவர்! கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கும், சினிமாவுக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு உண்டு! அந்த வகையில் ஸ்ரீசாந்தும் சினிமாவுக்கு வருகிறார். ஆனால் நடிகராக இல்லை! இசை அமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியராக! இப்படம் ‘அன்புள்ள அழகா’ என்ற பெயரில் மலையாளம் மற்றும் தமிழில் உருவாக இருக்கிறது. ஸ்ரீசாந்த் இசையில் இப்படத்திற்காக ஸ்ரீசாந்தின் மைத்துனரும், பிரபல பின்னணிப் பாடகருமான மதுபாலகிருஷ்ணனும் ஒரு பாடலை பாட இருப்பதோடு இப்படத்தில் ஸ்ரீசாந்த் இப்படத்தில் ஒரு சிறப்பு வேடத்திலும் நடிக்க இருக்கிறார். இது தவிர மும்பையில் விரைவில் நடைபெறவிருக்கிற ஒரு ரியாலிட்டி ஷோவிலும் கலந்துகொண்டு நடனம் ஆட இருக்கிறர் ஸ்ரீசாந்த்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;