’லிங்கா’ குழுவினரை பாராட்டிய சோனாக்‌ஷி!

’லிங்கா’ குழுவினரை பாராட்டிய சோனாக்‌ஷி!

செய்திகள் 10-May-2014 3:35 PM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’வின் படப்பிடிப்பு மைசூரில் வேகம் பிடித்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா இருவரும் நடிக்க, தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பிலேயே ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்! ‘லிங்கா’வின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மும்பை திரும்பியுள்ள சோனாக்‌ஷி சின்ஹா லிங்காவில் நடித்தது குறித்து ட்வீட் செய்திருப்பதில், ‘ ‘‘அருமையான நாட்கள், எனது முதல் தமிழ் படமான ‘லிங்கா’வின் முதல் ஷெட்யூல் முடிந்து விட்டது, திறமையான டீம், ரொம்பவும் ஹேப்பியா ஃபீல் பண்றேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படம் இரண்டு காலகட்டங்களில் நடப்பது மாதிரியான கதை என்றும், அதில் சோனாக்‌ஷி சின்ஹா அந்த காலகட்டத்து பெண்மணியாக, வித்தியாசமான காஸ்ட்யூம்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;